தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையூறு விளைவித்த அரசியல் கட்சியின் உறுப்பினருக்கு பிணை
தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ருஹுணு ஜனதா கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்கவினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான சதுரங்க சந்திமால், 7,500 ரூபா ரொக்கப் பிணையிலும், 500,000 ரூபா சரீரப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குள் நுழைவதற்கான அனுமதிச் சீட்டு தன்னிடம் இருப்பதாகவும், எனவே அவர் மீது சட்ட விரோதமான குற்றச்சாட்டை சுமத்த முடியாது எனவும் நீதிமன்றில், அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு அனுமதி
இந்தநிலையில், அவரது கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிக்கணினியை விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
