முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவிக்கு முன்பிணை
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவை, முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக் காணப்பட்ட சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
மேன்முறையீடு தாக்கல்
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இந்த மேன்முறையீடு எதிர்வரும் மாதம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், அதுவரை சஷி வீரவன்சவை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீடு தொடர்பில் அந்த நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு செப்டெம்பர் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்