நல்லூரில் மாயமாகும் நாய்கள் : இரவில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்பில் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
குறித்த இரவு நேரங்களில் தெரு நாய்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக விலங்குகள் காப்பக நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இரவு நேரங்களில் நாய்களுக்கு உணவளிக்கும் போது முதல் நாட்களில் காணப்பட்ட நாய்களின் எண்ணிக்கைக்கும் அடுத்த சில நாட்களில் காணப்பட்ட நாய்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் காணப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து சுற்றியுள்ள பிரதேசவாசிகளை விசாரித்தபோது மாநகர சபையிலுள்ள சிலர் வந்து நாய்களை பிடித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்போது ஆரம்பித்துள்ள நல்லூர் திருவிழா காலங்களில் பத்தர்களுக்கு இடையூறாக நாய்கள் காணப்படுவதால் அவை தொலைதூரங்களுக்கு கொண்டு விடப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்....
அரச காணியில் தமிழரொருவரால் கட்டப்பட்டுள்ள கட்டடம்! விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் குறித்தும் அமைச்சர் விளக்கம்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening