கணேமுல்ல சஞ்சீவ படுகொலையுடன் தொடர்புடைய நபரின் வாக்குமூலம்! கொழும்பு வீடொன்றில் சிக்கிய ஆபத்தான பொருள்
வெளிநாடொன்றில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'சமித்புர சத்து' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த திமுது சதுரங்க என்ற சமித்புர சது, ஓமானில் கடந்த 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.
குறித்த சந்தேகநபர், மட்டக்குளியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சிவப்பு அறிவித்தல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தெரிவித்து இவருக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்று மற்றும் 12 தோட்டாக்கள் மட்டக்குளி பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திமுத்து சதுரங்க பெரேரா, 2025 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஓமானுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.
அவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் சந்தேக நபர்களில் ஒருவராவார் என்பதுடன், நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan