இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம் - அர்ச்சுனா எம்.பியின் அதிரடி அறிவிப்பு
“இதுவே எனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இறுதி நாடாளுமன்ற உரை
தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்ற ஒத்திவைப்பு பிரேரணையை கோரிய இராமநாதன் அர்ச்சுனா எம்.பி, இந்த உரை தனது இறுதி நாடாளுமன்ற உரையாக இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் இன்று வரை, சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத இரண்டு இனங்கள் நாட்டில் வாழ்ந்து வருகின்றன.
தமிழ் மக்கள்
இன ரீதியாக வேறுபட்டிருந்தாலும், மொழி ரீதியாக இரு இனங்களும் ஒன்றிணைந்துள்ளன. எனினும், இந்த இரண்டு இனங்களையும் வேறுபடுத்தி ஆட்சி செய்வதே பெரும்பான்மை இனத்தின் பலமாக இருந்து வருகின்றது.

காலம் காலமாக ஆட்சிக்கு வந்த இனவாத அரசாங்கங்கள் அடக்குமுறையையும் இன அழிப்பையும் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வேறுபடுத்தி ஆட்சி செய்வது பெரும்பான்மை இன அரசியல்வாதிகளின் அரசியல் தந்திரமாக இருந்து வருகின்றது.
இதன் அடிப்படையில், தமிழ் பேசும் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் திட்டமிடப்பட்ட அரசியல் செயற்பாடுகளை அடையாளம் காண்பதும், முஸ்லிம் மக்களை பாதுகாப்பதும் காலத்தின் கட்டாயமாகும் என இராமநாதன் அர்ச்சுனா எம்.பி தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening