இளங்குமரன் எம்.பி க்கு கிளிநொச்சி நீதிமன்று கொடுத்துள்ள உத்தரவு
கடந்த நவம்பர் மாதம் இறுதியில் பேரிடர் சமயம் கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவகர் ஒருவரைத் தாக்கி குற்றத்திற்காக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று(20.01.2026) கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் செல்ல அனுமதி
கிளிநொச்சியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிராம சேவகர் ஒருவரைத் தாக்கிய விவகாரத்தில், இளங்குமரன் எம்.பி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது மன்றில் முன்னிலையாகவில்லை. அதனால் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கும்படி பாதிக்கப்பட்ட கிராம சேவகர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
எனினும் அன்றைய தினம் நிரந்தர நீதிவான் மன்றில் பிரசன்னமாகி இல்லாமல், வழக்கு பதில் நீதிவான் முன்னிலையில் எடுக்கப்பட்ட காரணத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக நான்கு நாட்களில் (20ஆம் திகதி) வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்தது.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்நிலையில் நேற்று(19) இளங்குமரன் சார்பில் ஒரு நகர்த்தல் பத்திரம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அது எடுக்கப்பட்ட போது இளங்குமரன் மன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இன்று நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற காரணத்தினால், தான் நாடாளுமன்றுக்குச் செல்ல வேண்டி இருக்கின்றது என்றும், அதனால் முன்கூட்டியே ஒரு நாள் மன்றில் முன்னிலையாகின்றார் என்றும் இளங்குமரன் தரப்பில் இருந்து நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதித்தது. எனினும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி வழக்கு இன்றும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து வழக்கு செப்டம்பர் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan