முல்லைத்தீவில் கைது செய்யப்பட்ட மாணவனுக்கு பிணை
புதிய இணைப்பு
முல்லைத்தீவில் அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் கைதான மாணவனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மோதல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மாணவனை புதுக்குடியிருப்பு பொலிஸார் இன்று மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்தி - ஷான்
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு அரச பாடசாலை ஒன்றில் மாணவர்கள் இரு குழுக்களாக மோதிக்கொண்டதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
குறித்த பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களிடையே கருத்துவேறுபாடு முற்றியதில் அவர்களுக்கிடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
பலத்த காயம்
குறித்த மோதலில் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில். முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
