சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை
தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களது வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தலா ஒரு இலட்சம் சரீர பிணையிலும், ரூபா 5000 காசுப் பிணையிலும் செல்ல பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கு எதிர்வரும் 18/03/2022 வரை பிற்போடப்பட்டுள்ளது. அவர்களது படகுகள் மற்றும் தொழில் உபகரணங்கள் விடுவிக்கப்படவில்லை என்பதுடன் கடந்த வருடம் சட்டவிரோதமான கடற்றொழிலில் ஈடுபட்ட 13 பேருக்கும் இன்றையதினம் தலா 25000/- வீதம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளைக் கடற்றொழில் பிரதான பரிசோதகர் ராஜேந்தர்
நெறிப்படுத்தியிருந்தார்.



