மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்து வான் பாய்வதால் ஆற்றை அண்டிய தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்...
இதன் காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பதுடன் நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருப்பதுடன் கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்றொழில் நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
