வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை : பலர் பாதிப்பு(Photos)
வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளதுடன், 3 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று (09) மாலை திடீரென கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக பாவற்குளம் படிவம் 6 பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், பிரமனாலங்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 அங்கத்தவர்களும், முதலியார்குளம் பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 அங்கத்தவர்களும் என 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன், குறித்த மூன்று குடும்பங்களும் வசித்து வந்த 3 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.


தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 5 மணி நேரம் முன்
இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமி யார் என்று தெரிகிறதா? வில்லத்தனத்தில் அனைவரையும் மிரட்டியவர் Cineulagam