இலங்கையில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை: வானிலையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம் (Video)
மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகப் பல பிரதேசங்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டுள்ளன.
இன்றைய தினம் (22.03.2023) ஹட்டன், பொகவந்தலாவ - கியூ தோட்டத்தில் கடும் காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் பாரிய மரங்கள் முறிந்து, மின் இணைப்புகள் மீது வீழ்ந்து அப்பகுதிக்கான மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை பெய்து வருவதால் அப்பிரதேசத்தில் கடுமையான குளிர் நிலவுவதாகவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
