கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு: வீடுகள் பகுதியளவில் சேதம் (Photos)

Mullaitivu Weather
By Keethan Dec 16, 2023 11:01 AM GMT
Report

புதிய இணைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் 1086 குடும்பங்களை சேர்ந்த 3440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இடர் முகாமைத்துவ பிரிவினால் இன்று பகல் 12.30 க்கு வெளியிடப்பட்ட புள்ளி விபரத்தில்  இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடர் முகாமைத்துவப்பிரிவு

கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில், 247 குடும்பங்களை சேர்ந்த 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், 839 குடும்பங்களை சேர்ந்த 2606 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அப்புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் வடிந்து வரும் நிலையில், தொடர்ந்தும் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றது.

இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து மக்களுக்கான எதிர்வு கூறல் உள்ளமையால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு 

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில் குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று (16) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளன.

24 அடி கொள்ளளவு கொண்ட முத்துஐயன்கட்டுக்குளத்தில் 23 அடி 3 அங்குல நீர்மட்டம் காணப்படுகிறது.

6 மாத காலத்திற்குள் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

6 மாத காலத்திற்குள் கொழும்பில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விசேட திட்டம்

நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலத்துக்கும் இரண்டு வான் கதவுகள் மூன்று அங்குலத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் சீரற்ற வானிலையால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு: வீடுகள் பகுதியளவில் சேதம் (Photos) | Bad Weather Mullaitivu

இன்று காலை முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் மஞ்சுளா ஜொய்ஸ்குமார் அழைப்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அருளம்பலம் உமா மகேஸ்வரன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பரமோதயன் ஜெயராணி, மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் நவரட்ணம் சுதாகரன், ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் இ.றமேஸ், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு வான் கதவுகளை திறந்து வைத்தனர்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 20 பாரிய மற்றும் நடுத்தர குளங்கள் காணப்படுவதாகவும் அனைத்து குளங்களும் அதன் உச்ச கொள்ளளவை அடைந்துள்ளதாகவும் எனவே தாழ் நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் தெரிவித்தார்.

மனைவி மதிவதனி எதிரியிடம் அகப்பட்டால் தலைவர் பிரபாகரனின் முடிவு (video)

மனைவி மதிவதனி எதிரியிடம் அகப்பட்டால் தலைவர் பிரபாகரனின் முடிவு (video)

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்கள் தொடர்பில் கொண்டு வரப்படும் தடை: வெளியான தகவல்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US