சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மக்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 221 குடும்பங்களைச் சேர்ந்த 733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்ததுடன் 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சீரற்ற காலநிலை காரணமாக நேற்று மாலை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததன் காரணமாக ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584 பேரும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிகண்டி பொதுநோக்கு மண்டபத்தில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டு 14 குடும்பங்களை சேர்ந்த 46 பேர் தங்க வைக்கபட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழை காரணத்தினால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பாலத்தினால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இவ் பாதுகாப்பற்ற பாலத்தினால் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டிய துப்பாக்கி நிலை காணப்படுவதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் இப்ப பாதையை பாவித்து வருகின்றார்கள்.
கனகாம்பிகை குளம் வான் பாய்கின்றமையால் இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.
கனகாம்பிகை குளத்தின் 10 அடி 6 அங்குலம் கொள்வனவு கொண்ட குலமான தற்போது 10 அடி 11.5 அங்குலம் காணப்படுகின்றமையால் தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இதனால் தாழ்வுபாடுகளில் உள்ள மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.





