யாழ். குருநகரில் கடும் காற்று! பல வீடுகள் சேதம்
புதிய இணைப்பு
குருநகரில் இன்று காலை வீசிய பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் தேவாலயத்தை அமைச்சர் சந்திரசேகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்த அனர்த்தத்தால் 30இற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு தயாராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
செய்தி - கஜிந்தன்
முதலாம் இணைப்பு
யாழ். குருநகர் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 30இற்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளன.
இன்று காலை 06.45 மணியளவில் பலத்த காற்று வீசியதால், கொலை விலக்கி மாதா ஆலயம் உள்ளிட்ட பல வீடுகள் இவ்வாறு சேதமடைந்துள்ளன.
இந்த அனர்த்தத்தால் அதிகளவான வீடுகள் பகுதி அளவிலும் புனித கொலை விலக்கி மாதா ஆலய திருப்பண்ட அறைகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன.
அத்தோடு சில படகுகளும் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்