சீரற்ற காலநிலையால் ஆறுகளில் அதிகரிக்கும் நீர் மட்டம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அம்பலாந்தொட்டையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளவை கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வளவை கங்கையை அண்மித்த பொலான உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாழ்நிலப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
வெல்லவாய - அலிகொட்டியார நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் பெய்து வரும் அடை மழையினால் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 90 சதவீதத்தை எட்டியுள்ளது.
10 வருடங்களின் பின்னர் சமனலவெவ நீர்த்தேக்கத்தில் உயரிய அளவில் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம், அத்தனகலு ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு சிவப்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெள்ள அபாய முன்னெச்சரிக்கை
அத்துடன், மஹா ஓயா, நில்வளா கங்கை, களு கங்கை மற்றும் களனி கங்கையை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளதாக அந்த நீர்த்தேக்கத்துக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கெனியோன், லக்ஸபான, நவ லக்ஸபான, பொல்பிடிய, மவுஸ்ஸாக்கலை மற்றும் மேல் கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளையும் திறப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பொறியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்காரணமாக, குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |