தீவிரமடையும் சீரற்ற காலநிலை பாதிப்புக்கள் : மக்களிடம் கோரப்பட்டுள்ள உதவி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவான மக்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு கொழும்பு - இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
வெள்ள நிவாரண உதவி செயற்திட்டத்தில் உங்களது பங்களிப்பையும் அவர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
தேவைப்படும் உதவி
இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் (OBA) தற்போதைய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக வெள்ள நிவாரண நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இயற்கைப் பேரிடரால் கொழும்பு மற்றும் இலங்கையின் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த உதவித் திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
எனவே ஏனைய பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் நாடியுள்ளது.
உலர் உணவுப் பொருட்கள் (அரிசி, பருப்பு, பிஸ்கட் , போன்றவை) அடிப்படை முதலுதவி,(பாம், சமகன் போன்றவை) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார அணையாடைகள் உள்ளிட்டவை பெருமளவில் தேவைப்படுகின்றன.
உதவி செய்ய விரும்புவோர், இந்துக்கல்லூரி, பிரதான நுழைவாயில் 77 , Lorenz road Colombo - 4 என்ற முகவரியில் உள்ள சேகரிப்பு நிலையத்திலும், கொழும்பு - விவேகானந்தா கல்லூரியில் உள்ள சேகரிப்பு நிலையத்திலும் பொருட்களை ஒப்படைக்க முடியும்.
இந்த நிவாரண நடவடிக்கை சமூகங்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் : பிரணவன் (071) 426 9291, தினேஷ் - (075) 564 6809
இந்த பதிவு இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்வின் செய்திப் பிரிவினரால் பிரசுரிக்கப்பட்டுள்ளது |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
