சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள்

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Weather
By Independent Writer Nov 27, 2024 02:27 PM GMT
Report

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாரியளவிலும் பகுதியளவிலும் சேதங்கள் பதிவாகியுள்ளன. 

யாழ்ப்பாணம் 

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43ஆயிரத்து 682பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் 129 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. அத்துடன் 5 உட்கட்டமைப்புகள் முழுமையாகவும், 4 உட்கட்டமைப்புகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அத்துடன் அனர்த்தத்தால் ஒருவர் காயமடைந்துள்ளார். 


மேலும், 66 பாதுகாப்பு முகாம்களில் ஆயிரத்து 634 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 793பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். 

செய்தி - கஜி 

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் 1272 குடும்பங்களை சேர்ந்த 4287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

ஐந்து நலன்புரி நிலையங்களில் 40 குடும்பங்களை சேர்ந்த 119 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குறித்த பகுதி மக்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

செய்தி - எரிமலை

வவுனியா 

அந்தவகையில், வவுனியா - நொச்சிமோட்டைப் பகுதியில் வெள்ள நீர் வீதியை மேவி பாய்வதால் ஏ9 ஊடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.

பரங்கி ஆறு ஆற்றுப்படுகை மாமடுக்குளத்தில் ஆரம்பித்து, நொச்சிமோட்டை பாலம் வழியாக பேராற்று பாய்ந்து செல்வதால் குறித்த வீதியில் வெள்ளம் மேவி பாய்ந்து வருகின்றது. குறித்த பகுதியில் சிறிய ரக வாகனங்கள் பல பயணிக்க முடியாத நிலையில் இரவில் இருந்து நீண்ட வரிசையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்காரணமாக கனகரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏ9 வீதியூடாக யாழிற்குப் பயணிக்கும் வாகனங்கள் ஹெப்பத்திகொல்லாவ, வெலியோயா, முல்லைத்தீவு, பரந்தன் வழி அல்லது மதவாச்சி, செட்டிகுளம், மன்னார் வழி மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் | Bad Weather Conditions Affected Many Areas

செய்தி - திலீபன் 

மத்திய மலைநாடு 

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பாதிப்பு: மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் | Bad Weather Conditions Affected Many Areas

நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. 

செய்தி - திருமால் 

முல்லைத்தீவு 

முல்லைத்தீவு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் தொடர்ச்சியான மழை பெய்துவரும் நிலையில் கடந்த 23ஆம் திகதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி இன்றையதினம் வடக்கு நோக்கி நகர்ந்துவரும் நிலையில் கடல்கள் அனைத்தும் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதோடு காற்றின் வேகமும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரியிடம் இது தாெடர்பாக வினவிய போது அண்மைய நாட்களாக காற்றின் வேகம் மணிக்கு 21-24 கி.மீ வேகத்தில் இருந்ததாகவும் இன்று தற்போது மணிக்கு 48 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதாகவும் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

செய்தி - ஷான் 



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US