கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞனின் மோசமான செயல்
கனடாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 வயதான மனு சுகுணகுமார் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
13 வயதிற்குட்பட்ட சிறுமிகளுடன் இணையவழி ஊடாக தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சுகுணகுமார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனேடிய பொலிஸார்
சந்தேகநபர், Snapchat மற்றும் Reddit ஆகிய சமூக ஊடக செயலிகள் மூலம் அந்த சிறுமிகளை தொடர்பு கொண்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமிகளின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்புமாறு சந்தேகநபர் கோரியமை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சுகுணகுமார் பல இலத்திரனியல் சாதனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேக நபரினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு அவரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.