கொட்டாஞ்சேனை படுகொலை பின்னணியில் ஆளும் தரப்பு எம்.பி! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கொழும்பு - கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கும், அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் உடந்தையாக இருந்ததாக எழுப்பப்படும் கேள்விகள் குறித்து அமைச்சரவைப் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்று(25.02.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர், பொலிஸாரால் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுக்கு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாக ஏன் விவாதிக்கப்படுகிறது கேள்வி எழுப்பியிருந்தார்.
நளிந்த ஜயதிஸ்ஸ
எனினும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அந்தக் கூற்றை மறுத்தார்.
மேலும், அத்தகைய கூற்றை தாமும் அறிந்ததாக நளிந்த கூறியிருந்தார்.
அத்துடன், வேறு யாரும் இதுபோன்ற குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை என்றும் ஆளும் கட்சியின் எந்த உறுப்பினரும் இதற்குப் பின்னால் இல்லை என்று தான் உத்தரவாதம் அளிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
