புத்தர் சிலைக்கு அடியில் இருந்து ஆண் சிசு உயிருடன் மீட்பு
கண்டி, வத்தேகம - எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகிலிருந்து ஆண் சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் இருந்த புத்தர் சிலைக்கு அடியில் இருந்து குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகளால் ஆண் சிசு மீட்பு
புத்தர் சிலைக்கு அடியில் ஆண் சிசு ஒன்று உயிருடன் காணப்படுவதை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக வத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் குழந்தையைப் பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
You may like this Video

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
