புத்தாண்டில் நேர்ந்த துயரம் - பரிதாபமாக உயிரிழந்த குழந்தை
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான இன்று தந்தையின் வாகனத்தில் விபத்துக்குள்ளாகி குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த லொரியை இயக்கி, வீட்டை விட்டு வெளியேறுவதற்காக பின்னால் எடுத்தபோது, வீட்டில் இருந்த ஒரு குழந்தை லொறியின் பின்புற சக்கரத்தின் கீழ் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
உயிரிழந்த குழந்தை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்த குழந்தை 01 வயது 07 மாத வயதுடையது எனவும் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த லொறி ஓட்டுநரின் மகன் எனவும் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தந்தை பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை News Lankasri

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
