நடுக்கடலில் குழந்தை பிரசவித்த அகதிப்பெண்! வெளியான நெகிழவைக்கும் புகைப்படங்கள்
படகொன்றில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு நடுக்கடலில் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொராக்கோ(Morocco) நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு(Spain) சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்பெயர்பவர்களுடன் படகொன்று பயணித்துக்கொண்டிருந்த போது படகில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
நெகிழவைக்கும் காட்சிகள்
சிறிது நேரத்தில் சக பயணிகளின் உதவியுடன் அழகான பெண் குழந்தையொன்று அந்தப் பெண்ணுக்கு பிறந்துள்ளது.

நடுக்கடலில், பிறந்த பிள்ளையுடன் அந்தப் பெண் படகில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தப் படகிலிருந்த 14 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 60 பேரையும் ஸ்பெயின் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri