இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் அனுபவிக்க வேண்டும்! பிரதமர்
இலங்கையின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பேணுவதற்கு இலங்கை ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி
இலங்கையின் ஆயுர்வேதம் உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளதாகவும், இந்தத் தொழில் மூலம் அந்நியச் செலாவணியை உருவாக்குவதற்கான முறைமை நடைமுறையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை மதிப்பீடு செய்த பின்னர், நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் ஆயுர்வேத மையங்களை திறப்பதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் அழைப்பு
ஆயுர்வேதப் பட்டம் பெற்ற அனைவரையும் இந்த தேசியப் பணியில் தீவிரமாக இணையுமாறு அழைப்பு விடுத்த பிரதமர், ஆயுர்வேத மருத்துவத்துறை இலங்கையின் மருத்துவத் துறையின் கோட்டையாக உள்ளது.
அரசாங்க ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், மருத்துவத் துறையானது ஒரு மருத்துவ முறைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
