தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்
யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம் நேற்று (28.09.2026) வடக்கு - கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கை
தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகளுக்கு கடும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.