யாழில் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிக்கான நடைபவனி ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நேற்று (21) குறித்த நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளதுடன் வடக்கு மாகாண பிராந்திய சுகாதார பணிமனை மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை என்பன இதில் பங்கேற்றுள்ளது.
விழிப்புணர்வு
ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடாத்தப்பட்டுள்ளது.
இந்த நடைபவனி யாழ். போதனா வைத்தியசாலையில் காலை 6 மணியளவில் ஆரம்பித்து பண்ணை வீதி வழியாக ஊர்காவற்றுறை வைத்தியசாலையை சென்றடைந்துள்ளது.