புதுக்குடியிருப்பு பகுதியில் பன்றி நெல்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை!
புதுக்குடியிருப்பு-கைவேலி, வயல் பகுதியில் காணப்படும் பன்றி நெல்களை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடானது இன்றையதினம் (25.06.2025) இடம்பெற்றுள்ளது.
அண்மைய காலங்களாக பன்றி நெல்லினால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
விழிப்புணர்வு
இதனை கட்டுப்படுத்தும் நோக்கோடு விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் மந்துவில் மற்றும் கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் விழிப்புணர்வு செயற்பாடானது கைவேலி வயல்பகுதியில் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் போது பன்றி நெல் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் பன்றி நெல்லின் தாக்கம் மற்றும் கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமம் தொடர்பாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முல்லைத்தீவு பிரதி விவசாயப் பணிப்பாளர் பணிமனை பாட விதான உத்தியோகத்தர் நிறஞ்சன்குமார் , மந்துவில் விவசாய போதனாசிரியர் பிரசாந்தன், கோம்பாவில் விவசாய போதனாசிரியர் மதுசியா கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.








நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




