கிளிநொச்சியில் வேள்ட் விசன் நிறுவனத்தினால் விழிப்புணர்வு செயலமர்வு (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தினால் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான குதூகளிப்புடன் கூடிய அறிவூட்டல் எனும் தொனிப்பொருளில் குறித்த விழிப்புணர்வு செயலமர்வு இன்று (09-09-2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இந்த செயலமர்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்
இந்நிகழ்ச்சி திட்டத்தில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 190 வரையான சிறுவர்கள் கலந்து கொண்டிருந்த்துடன் உறவுகளும் விடலைப் பருவமும், உணர்வு சார் நுண்ணறிவு, ஒழுக்கமும் பொறுப்புக்களும், சகபாடிகளின் அழுத்தம் என்ற தலைப்புக்களின் கீழ் கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதாவது சிறுவர்கள் தமது பொழுதுகளை அர்த்தமுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் கழித்து உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் அக்கராயன் பிரதேசத்திற்கு உட்பட்ட 190க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வேள்ட் விசன் நிறுவனத்தின் பணியாளர்கள் பகுதி கிராம அலுவலர் மற்றும் பதவி நிலை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri