ஜி - 20 உச்சி மாநாடு புதுடில்லியில் இன்று ஆரம்பம்
இந்த ஆண்டு ஜி20 மாநாடு இந்தியாவின் புதுடில்லியில் ஆரம்பமாகவுள்ளது. .
புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் இன்று (09.09.2023) இரவு 8.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
உச்சிமாநாட்டிற்கான இந்தியாவின் மதிப்பிடப்பட்ட செலவு 100 மில்லியன் அமெரிக்க டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய நடராஜர் சிலை
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் அமெரிக்க ஜனாதிபதி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லிக்கு வருகைத்தந்துள்ளார்.
மேலும் அவர் இந்தியாவிற்கு வருகை தரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வெளிநாட்டு பிரதமர் ஆவார்.
ஜி20 மாநாடு நடைபெறும் பாரத மண்டபத்திற்கு முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சிலை 27 அடி உயரமும் 20 தொன் நிறை கொண்டது. இதற்கிடையில், இந்திய விமானப்படையின் தளபதி ஒருவர் G20 கொடியை தரையில் இருந்து 10,000 அடி உயரத்தில் காட்டிய விதம் வெளிநாட்டு ஊடகங்களில் அதிக கவனம் பெற்றிருந்தது.
ஜி 20 மாநாட்டின் முக்கிய அம்சங்கள்
1. ஜி-20 கூட்டமைபின் முதலாவது கூட்டம் 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்றது.
2. ஜி 20 கூட்டமைப்பு மொத்தம் 17 உச்சி மாநாடுகளை நடத்தி உள்ளது.
3. ஜி 20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது.
4. ஜி 20 கூட்டமைப்பு நாடுகள்:
- 1.அமெரிக்கா 2.அர்ஜென்டினா 3.ஆஸ்திரேலியா 4.பிரேசில் 5.கனடா 6.சீனா 7.பிரான்ஸ் 8.ஜெர்மனி 9.இந்தியா 10.இந்தோனேசியா 11.இத்தாலி 12.ஜப்பான் 13.கொரியா 14.மெக்சிகோ 15.ரஷ்யா 16.சௌதி அரேபியா 17.தென்னாப்பிரிக்கா 18.துருக்கி 19.இங்கிலாந்து 20.ஐரோப்பிய ஒன்றியம்
5.ஜி 20 உச்சி மாநாடுகளுக்கு தலைமைப் பொறுப்பு வகிக்கும் நாடு சிறப்பு விருந்தினர்களாக சில நாடுகளின் பிரதிநிதிகளை அழைப்பது வழக்கம்.
டெல்லி உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ள சிறப்பு விருந்தினர் நாடுகள்:
- 1.பங்களாதேஸ் 2.எகிப்து 3.மொரிஷியஸ் 4.நெதர்லாந்து 5.நைஜீரியா 6.ஓமன் 7.சிங்கப்பூர் 8.ஸ்பெயின் 9.ஐக்கிய அரபு அமீரகம்
6.உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜி20 நாடுகள் பங்களிப்பு 85%. உலக வர்த்தகத்தில் பங்களிப்பு 75%. உலக மக்கள் தொகையில் 70%.
Get a sneak peek into the delegation offices at the #G20 Summit!
— G20 India (@g20org) September 7, 2023
Here’s an exclusive preview by #G20India Chief Coordinator @harshvshringla. pic.twitter.com/r1s3WGPdS2
7. ஜி 20 18-வது உச்சி மாநாட்டை முன்னிட்டு இதுவரை மொத்தம் 18 அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஜி 20 உச்சி மாநாட்டை முன்வைத்து 56 இடங்களில் இந்தியாவில் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
8. அடுத்த ஜி20 மாநாட்டை பிரேசில், தென்னாப்பிரிக்கா நடத்தும்.
9. ஜி20 டெல்லி உச்சி மாநாட்டில் சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் சீனாவின் பிரதமர் லி கியாங் பங்கேற்கிறார்.
10. ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பங்கேற்கவில்லை.
11.ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் மற்றும் மெக்சிகோ ஜனாதிபதி ஆன்ட்ரஸ் மானுவல் ஆகியோரும் பங்கேற்கவில்லை.
12.ஜி20 டெல்லி உச்சி மாநாட்டுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடா வருகை உறுதியாகவில்லை.
13. ஜி 20 டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம்:
- 1.அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் 2.அவுஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ் 3.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 4.பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் 5.கனடா பிரதமர் ட்ரூடோ 6.ஜெர்மன் ஜனாதிபதி ஒலாஃப் 7.ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 8.தென் கொரியா ஜனாதிபதி சுக் யோல் 9.செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 10.பங்களாதேச பிரதமர் ஷேக் ஹசீனா 11.துருக்கி ஜனாதிபதி எர்டோகன் 12.அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் 13.நைஜீரியா ஜனாதிபதி போலா டினுபு
14. ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 9ஆம் திகதி விருந்து உபசாரம் செய்கிறார்.
இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
15. டெல்லி உச்சி மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் டெல்லி பொலிஸ், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என மொத்தம் 1,30,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
16. 45,000 பாதுகாப்பு படையினர் நீல உடையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளவுள்ளனர்.
17.ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு டெல்லி மெட்ரோ தொடருந்து உள்ளிட்ட சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
18.டெல்லி விமான நிலையத்துக்கு வருகை தருகிற, வெளி செல்லவுள்ள தலா 80 விமான சேவைகளும் ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு இரத்து செய்யப்பட்டுள்ளன.
19.ஜி 20 உச்சி மாநாட்டின் முகப்பில் பிரம்மாண்டமான 28 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் சுவாமி மலையில் உருவாக்கப்பட்டது.
20.ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்களுக்காக டெல்லியின் அனைத்து நட்சத்திர விடுதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன