கிளிநொச்சியில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
கிளிநொச்சியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் ஒரு நாள் செயலமர்வு நிகழ்வு நேற்று (15) நடைபெற்றது.
இந்த செயலமர்வை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன இணைந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏற்பாடு செய்துள்ளன.
பலர் பங்கேற்பு
கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி பயிற்சி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam