கிளிநொச்சியில் செயற்கை அவயவங்களை உருவாக்கும் திட்டம் அங்குரார்ப்பணம்!
செயற்கை அவயவங்களை குறிப்பாக கை மற்றும் கால் போன்றவற்றை முப்பரிமான (3D)வடிவில் உருவாக்கி அவயவங்களை இழந்தவர்களுக்கான செயற்கை அவயவங்களை வழங்கும் பொருட்டு யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடம் மற்றும் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் பொறியியல் பீட பீடாதிபதி பேராசிரியர் ஏ.கணேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அவயவங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடம்
இந்நிகழ்வில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறீசற்குணராஜா, பேராசிரியர் பிரேம அரசு, பேராசிரியர் கே. செல்வகுமார், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாற்றுவலுவுள்ளோர் என பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கனேடிய தூதுவர் பொறியியல் பீடத்திற்கு விஜயம் செய்து செயற்கை அவயவங்கள் தயாரிக்கும் ஆய்வு கூடத்தையும் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
