வாக்களிக்கும் உரிமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
வாக்களிக்கும் உரிமையும், பொதுத்தேர்தலின் முக்கியத்துவம், தமிழ் பேசும் மக்களின் இருப்பு தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் இரண்டாம் நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (09) திருகோணமலை நகர சபை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது
இந்த கலந்துரையாடல் திருகோணமலை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பிரதேச சிவில் வலையமைப்புகள் மற்றும் இளைஞர்களை ஒன்றிணைந்து நடாத்தப்பட்டது.
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள்
வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வினை காணும் வகையில் நிலையான அரசியல் தீர்வான சமஸ்டி தீர்வினை வலியுறுத்தி நிற்கும் கட்சிகளுக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்கினை செலுத்த கோரிய சிவில் வலையமைப்புகளின் கோரிக்கைக்கான தெளிவினை ஏற்படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் அமையப்பெற்றது.
கலந்துரையாடலில் தமிழ் கட்சிகளின் பிளவு மற்றும் ஒற்றுமையின்மை தொடர்பாகவும் எதிர்காலத்தில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளை உருவாக்குவதற்கான மக்களின் பங்களிப்பு பற்றியும் மக்கள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.








ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 2 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
