வவுனியாவில் தொழு நோய் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை
வவுனியாவில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலகமும் காவேரி கலாமன்றமும் இணைந்து இந்த செயற்திட்டத்தை நேற்று (16.08.2024) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு நடவடிக்கை
இலங்கையில் தொழுநோய் தொற்று ஏற்பட்டு வரும் மாவட்டங்களில் வவுனியாவும் முன்னனியில் உள்ளது.
இதனால் இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தொழுநோயை இனங்காணல், சிகிச்சை அளிக்கும் முறை மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுபாஸ்கரன், தோல் நோய் சிகிச்சைப் பிரிவு வைத்தியர் எம்.சுதன், இயன்மருத்துவப் பிரிவு வைத்தியர் ரி.கேதீஸ்வரன், முன்னாள் பொது சுகாதார பரிசோதகர் ரி.தியாகலிங்கம் ஆகியோர் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்ததுட்ன், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.







உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
