லண்டனிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம்

Bandaranaike International Airport London Turkey
By Vethu Jun 15, 2022 03:20 AM GMT
Report

மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது.

துருக்கிய வான்வெளியில் இருக்கும் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.

துருக்கிய வான்பரப்பில் ஏற்படவிருந்த அனர்த்தம்

லண்டனிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் | Avoids Biggest Possible Mid Air Collision

அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 விமானத்தின் விமானியிடம் அவர்கள் பறந்து கொண்டிருந்த 33,000 அடியில் இருந்து 35,000 அடிக்கு பயணிக்குமாறு தெரிவித்துள்ளது.

விழிப்புடன் இருந்த UL விமானி மற்றும் பணியாளர்கள், ஏற்கனவே பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் ஒன்று 15 மைல் தொலைவில் 35,000 அடி உயரத்தில் பறந்ததை அவதானித்துள்ளனர்.

இதன் போது மேலே ஏற்கனவே ஒரு விமானம் பறப்பதாக அங்கராவில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பிரிவினருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

விமானியின் துணிச்சலான முடிவு

லண்டனிலிருந்து கொழும்பு சென்ற விமானத்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் | Avoids Biggest Possible Mid Air Collision

டுபாய் மற்றும் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் UL விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.

விமானங்களை சரிபார்த்த அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு UL விமானியிடம் 35,000 அடி உயரத்தில் எந்த விமானத்தையும் தங்கள் ரேடாரில் கண்டறியவில்லை என தெரிவித்து UL விமானத்தை மேல் நோக்கி பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதன் போது பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை விமானத்தின் ரேடாரில் கண்டறிந்த விமானி, மீண்டும் அங்காரா விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.

சில நிமிடங்களுக்குப் பின்னரே விமானப் போக்குவரத்து பிரிவு தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே 35,000 அடிக்கு மேலே விமானம் ஒன்று இருப்பதால், UL விமானத்தை மேல் நோக்கி செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

275 பயணிகளின் உயிர்கள் பாதுகாப்பு

UL விமானி அறிவிக்கப்பட்ட உயரத்திற்கு பறந்திருந்தால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தை விட அதிக வேகத்தில் UL விமானம் பறந்ததால், பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதியிருக்கும்.

இந்த நிலையில் அவதானமாக செயற்பட்ட UL விமானி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

UL 504 விமானத்தில் இருந்த 275 பயணிகள் அதன் பணியாளர்கள் மற்றும் பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதன் பணியாளர்களின் உயிர்களை UL 504 விமானத்தின் தலைமை விமானியின் விழிப்புணர்வு மற்றும் வலுவான முடிவு காரணமாக காப்பாற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US