கொழும்பில் பரிதாபமாக உயிரிழந்த சாரதி
கொழும்பில் இன்று(17.06.2023) காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி பம்பலப்பிட்டி வீதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்திற்கான காரணம்
இதன்போது படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
கண்டியில் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பம்பலப்பிட்டி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |