டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியரின் சாதனை
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்(Mitchell Starc) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்படி, அவர் 15 பந்துகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஐந்து முன்னிலை விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் 9 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
டெஸ்ட் போட்டி
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 400 விக்கட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய வீரர் என்ற பட்டியலில், சேன் வோர்ன், க்ளென் மெக்ராத் மற்றும் நேதன் லியோன் ஆகியோருடன் அவர் இணைந்துள்ளார்.
இதேவேளை சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 176 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.