3 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்த நபர்: இணையத்தில் பரபரப்பாகும் காணொளி
பசுபிக் பெருங்கடலில் காணாமல் போன அவுஸ்திரேலிய மாலுமியும் அவரது நாயையும் 3 மாதங்களுக்குப் பிறகு மீட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டிம் ஷாடாக் என்பவரும் அவரது நாயும் பல மாத தேடுதலின் பின்னர் இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
தென் பசுபிக் கடலுக்கு சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட புயல் காரணமாக குறித்த மாலுமியின் படகு சிதைவடைந்துள்ளது.
மாலுமியின் அனுபவம்
இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக நடுக்கடலில் பச்சை மீனையும், மழைநீரையும் அருந்தி உயிர்வாழ்ந்துள்ளார்.
தனது கடல் பயணத்தின் போது மீன்பிடி சாதனங்களையும் உயிர்வாழத் தேவையான சில கருவிகளையும் மட்டும் உடன் எடுத்துச் சென்றுள்ளார் அவை இரண்டையும் வைத்துக் கொண்டே சுமார் 90 நாட்கள் இவர் உயிர் வாழ்ந்துள்ளார்.
குறித்த மாலுமியை மீட்கும் போது எடுக்கப்பட்ட காணொளி தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மாலுமி கூறுகையில், "நீண்ட காலம் கடலில் தனிமையில் இருந்துள்ளோம்.படகில் செல்வதற்கு முன்னரே தேவையான சில உயிர் பிழைக்கும் கருவிகளை எடுத்துச் சென்றேன். அது தான் இத்தனை நாட்கள் என்னைக் காப்பாற்றியது." எனவும் தெரிவித்துள்ளார்.
??Australian man Tim Sheddock and his dog Bella, who drifted in the Pacific Ocean for three months after a storm, have been rescued, according to 9news. The sailor set off from Mexico to French Polynesia in April. After the boat was damaged in a storm, they survived on raw fish… pic.twitter.com/SFDeHUOrJv
— AG Breaking News (@AGiruckis) July 17, 2023

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
