இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மன்னாருக்கு விஜயம்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் சில்வெஸ்டர் வோர்திங்டன் மன்னாருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து இன்று (28.03.2024) இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
விசேட கலந்துரையாடல்
இதன் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார்.
மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளும் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri