வவுனியாவில் இளம் யுவதி சடலமாக மீட்பு
வவுனியா- சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது, இன்றைய தினம் (28.03.2024) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
வவுனியா - சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்ட நிலையில் காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம் - சிதம்பரநகர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam