அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுபவர்களில் 5 நிதியாண்டுகளாக இந்தியர்கள் முதலிடம்
அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சின் தரவுகளின் படி, கடந்த 2020 ஜுலை முதல் 2021 ஜுன் வரையான காலப்பகுதியில், புலம்பெயர்பின்னணி கொண்ட 138,646 பேர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றிருக்கின்றனர்.
இவர்களில் 24,076 பேர் இந்தியர்கள் ஆவர். இரண்டாமிடத்தில் 17,316 என்ற எண்ணிக்கையுடன் பிரிட்டிஷ் பின்னணிகொண்டோர் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தவிர பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 8,659 பேர், சீனாவைச் சேர்ந்த 7,302 பேர், நியூசிலாந்தைச் சேர்ந்த 5,612 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 5,415 பேரும், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ளனர்.
கடந்த 2019 – 2020 நிதியாண்டில் அவுஸ்திரேலிய குடியுரிமைபெற்ற 204,817 பேரில் 38, 209 பேருடன், இந்தியர்கள் முதலிடத்தில் காணப்பட்ட நிலையில், கடந்த 5 நிதியாண்டுகளாக அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுபவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளன.
கோவிட் பரவல் காரணமாக இதற்கு முந்தைய நிதியாண்டை விட 30 சதவீதம் குறைவான எண்ணிக்கையானோரே கடந்த நிதியாண்டில் அவுஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுள்ளனர்.


சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
