இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்திற்கு ஆதரவை உறுதிப்படுத்திய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் மற்றும் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் பிரைட் மாதத்தை கொண்டாடியுள்ளனர்.
“#PrideMonthஐ கொண்டாடுவதற்கும், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள LGBTQI+ சமூகத்திற்கான எங்கள் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் நான் எனது சக ஊழியர்களுடன் சேர்ந்துள்ளேன், பிரைட் மாத வாழ்த்துக்கள்” என்று பால் ஸ்டீபன்ஸ் ட்வீட் செய்துள்ளார்.
பிரைட் மாதத்தை கொண்டாடும் வகையில் ஜூன் மாதம் கொழும்பில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஓரினச் சேர்க்கையாளர்கள்
அண்மையில் தலைநகர் கொழும்பின் வீதிகளில் இலங்கையின் ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பிரைட் மாதத்தைக் குறிக்கும் வகையில் பேரணியாகச் சென்று பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுமாறு கோரினர்.
ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்தின் மீதான பொலிஸாரின் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் மற்றும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இலங்கையின் சட்டங்கள் இன்னும் ஓரினச்சேர்க்கையை ஒரு குற்றமாக கருதுகிறது, ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரோஹினி போட்ட பக்கா பிளான், ஆனால் அண்ணாமலைக்கு எழுந்த சந்தேகம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
