அவுஸ்திரேலியாவில் “ஒமிக்ரோனின் மகன்” பரவல்! எதிர்பார்க்கப்படும் அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதனையும் வெளியிடவில்லை.
அவுஸ்திரேலியாவில், ஒமிக்ரோனின் தொற்று அங்கு வேகமாக பரவும் நிலையில், “ஒமிக்ரோனின் மகன்” (Son of Omicron) என்ற தொற்று பரவி வருவதாக பேராசிரியர் பிரன்ட்ன் கிராப் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த தொற்று பரவியுள்ளது. தற்போதைக்கு இந்த தொற்றின் எண்ணிக்கை குறைவு என்ற போதிலும் இதன் பரவும் வேகம் ஒமிக்ரோனை விட அதிகம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை கொரோனா தொற்று ஆரம்பித்த நாளில் முதல் தடவையாக நேற்று அவுஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையான 97 பேர் மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.