இலங்கை- அவுஸ்திரேலிய கிரிக்கட் போட்டிகளில் மாற்றம்
2025 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணியுடன் திட்டமிடப்பட்டிருந்த ஒரே போட்டிக்குப் பதிலாக இரண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடத்தப்படும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடன் கலந்தாலோசித்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திருத்தப்பட்ட சுற்றுப்பயண அட்டவணையில் இப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் அடங்குகின்றன.
இரண்டு டெஸ்ட் போட்டி
இரண்டு டெஸ்ட் போட்டிகளும், காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன இதன்படி, முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 29 முதல் பெப்;ரவரி 2 வரையிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6 முதல் 10 திகதி வரையிலும் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகள் ஆரம்பத்தில் ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், அவை கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, முதல் ஒருநாள் போட்டி பெப்ரவரி 12 ஆம் திகதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி பெப்ரவரி 14 ஆம் திகதியும் நடைபெறும்.
இந்தப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலிய அணி 2025 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.