கபில்தேவை சுட்டுக்கொல்ல முயற்சித்த யுவராஜ்சிங்கின் தந்தை!
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முதலாக உலகக்கிண்ணத்தை பெற்று தந்த முன்னாள் அணி தலைவர் கபில்தேவை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயற்சித்தாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
யோக்ராஜ் சிங்கும் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி, 6 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்தநிலையில் தாம் கபில்தேவை கொலை செய்ய முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோக்ராஜ் சிங்
கபில்தேவ் இந்திய அணியின் தலைவராகவும், நோர்த் ஜோன் அணியின் தேர்வாளராகவும் இருந்தபோதே தம்மை அவர், பிசப் சிங் பேடியுடன் இணைந்து, நோத் ஜோன் அணியில் இருந்து விலக்கியதாக யோக்ராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தாம் சுனில் கவாஸ்கருடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர் என்ற காரணத்துக்காக தம்மை அணியில் இருந்து நீக்கினர் என்ற விடயம் தெரியவந்ததாகவும் யோக்ராஜ் குறிப்பிட்டுள்ளார்
இந்தநிலையில் எந்த வித காரணமும் இன்றி அணியில் இருந்து தம்மை அணியில் இருந்து நீக்கியதை அடுத்து, கபில்தேவுக்கு பாடம் கற்பிக்க எண்ணி, செக்டார் 9 என்ற பகுதியில் உள்ள கபில்தேவ் வீட்டுக்கு சென்றதாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடக்கூடாது
எனினும் அப்போது கபில்தேவ் அவரது தாயாருடன் வெளியே வந்த நிலையில், அவரின் தாயாரை மதித்து தாம், கபில்தேவை துப்பாக்கியால் சுடவில்லை என்று யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த தருணத்தில், இனி கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று முடிவெடுத்ததுடன், தமது மகன் கிரிக்கெட்டில் தடம் பதிக்க வேண்டும் என்று விரும்பியதாக யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam