உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ள அவுஸ்திரேலியா
உலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவுக்கு 11-ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்படும் இந்த பட்டியலுக்கு உலக நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி, நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் ஊழலற்ற அரசாட்சி போன்ற விடயங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும்,கோவிட் வைரஸால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கோவிட் பெருந்தொற்றை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடினார்கள் என்பது குறித்த மதிப்பீடும் இம்முறை சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதில்,பின்லாந்து நான்காவது தடவையாக தொடர்ந்தும் முதலிடத்தை பிடித்துள்ளதுடன்,இரண்டாம் இடத்தில் டென்மார்க்கும் ,மூன்றாம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் உள்ளன. உலக மகிழ்ச்சி நாளை முன்னிட்டு நேற்று வெளியிடப்பட்ட 2020ஆம் ஆண்டுக்கான இவ்வறிக்கையின் படி முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நாடுகள்:
1. Finland (7.842)
2. Denmark (7.620)
3. Switzerland (7.571)
4. Iceland (7.554)
5. Netherlands (7.464)
6. Norway (7.392)
7. Sweden (7.363)
8. Luxembourg (7.324)*
9. New Zealand (7.277)
10. Austria (7.268)
11. Australia (7.183)
12. Israel (7.157)
13. Germany (7.155)
14. Canada (7.103)
15. Ireland (7.085)
16. Costa Rica (7.069)
17. United Kingdom (7.064)
18. Czech Republic (6.965)
19. United States (6.951)
20. Belgium (6.834)
இந்தப் பட்டியலில் இலங்கை 129-ஆவது இடத்திலும், இந்தியா 139-ஆவது இடத்திலும், சிங்கப்பூர் 32-ஆவது இடத்திலும் மலேசியா 81-ஆவது இடத்திலும் உள்ளன.
கடைசியில் 149 ஆவது நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளதுடன்,ஸிம்பாவே 148 ஆவது இடத்திலும், ருவாண்டா 147 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
