லண்டன் விமான நிலையத்தில் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை மிரட்டிய பெண்
பிரித்தானியாவின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வேலை செய்யும் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டு பணியாளர்களை பிரித்தானிய பெண் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையத்தில் தமிழர்கள் உட்பட ஆசிய ஊழியர்கள் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் எனவும் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் குற்றம் சாட்டி, வெளிநாட்டினரை வெறுக்கும் வகையில் ஒரு பிரித்தானிய பெண் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
லண்டனில் தரையிறங்கிய பிறகு, பெரும்பாலான விமான நிலைய ஊழியர்கள் ஆசியாவை சேர்ந்தவர்கள் என்பதை லூசி வைட் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையம்
ஹீத்ரோ விமான நிலையத்தில் பெரும்பாலான ஊழியர்கள் ஆசிய நாட்டவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது.
மொழிப் புலமை இல்லாதவர்களை ஏன் விமான நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர் என பெண் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறானவர்களை பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்த வேண்டும் என லூசி வைட் கோரிக்கை விடுத்துள்ளார்.