நாங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தனி நாடு நடத்திய இனம்! சபையில் அர்ச்சுனா ஆவேசம்
நாங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தனி நாடு நடத்திய இனம் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம்(11) நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக செம்மணிக்கு வந்து செருப்புகளை வைத்து விட்டு ஓடாமல் தமிழ் மக்களுக்காக போராடினால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருவோம்.
நான் அமைச்சர் சந்திரசேகரனை அவமதிக்கவில்லை. அவருக்கு உதவி செய்யதான் நினைக்கின்றேன்.
வடக்கு மாகாணத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தர வேண்டிய 10 மில்லியன் பன்முகப்படுத்தப்பட்ட நிதியையும் வடக்கு மாகாணத்திலுள்ள 6 அமைச்சர்களுக்கும் அமைச்சர் சந்திரசேகரன் எடுத்து தரவில்லை என குறிப்பிட்டார்.