க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

G.C.E. (O/L) Examination Western Province Central Province Southern Province Northern Province of Sri Lanka
By Chandramathi Jul 11, 2025 04:29 PM GMT
Chandramathi

Chandramathi

in கல்வி
Report

புதிய இணைப்பு 

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "சாதாரண தரப் பரீட்சையில்,13,392 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். இது மொத்த மாணவர்களில் 4.15 சதவீதமாகும். அதேவேளை சுமார் 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை.

மீள் பரிசீலனை 

கடந்த மார்ச் 17ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை 3 ஆயிரத்து 664 பரீட்சை மத்திய நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெற்றன.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Ranking Of Provinces Based On Ol Results 2025

3 இலட்சத்து 98 ஆயிரத்து 182 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 75 ஆயிரத்து 965 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்திருந்த 4 இலட்சத்து 74 ஆயிரத்து 147 பரீட்சாத்திகளில் 3 இலட்சத்து 75 ஆயிரத்து 244 பேர் பாடசாலை ஊடாகவும், 49 ஆயிரத்து 908 பேர் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 425 152 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 26 பரீட்சாத்திகள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இது 73.45 சதவீதமாகும். 13 ஆயிரத்து 392 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். இது 4.15 சதவீதமாகும்.

வீதி கடைகளை அகற்ற முயன்றதால் கிம்புலாவலவில் பதற்றம்

வீதி கடைகளை அகற்ற முயன்றதால் கிம்புலாவலவில் பதற்றம்

  

மேல் மாகாணத்தில் 74 சதவீதமானோரும், மத்திய மாகாணத்தில் 73 சதவீதமானோரும், தென் மாகாணத்தில் 75 சதவீதமானோரும், வடக்கு மாகாணத்தில் 69 சதவீதமானோரும், கிழக்கு மாகாணத்தில் 74 சதவீதமானோரும், வடமேல் மாகாணத்தில் 71 சதவீதமானோரும், வடமத்திய மாகாணத்தில் 70 சதவீதமானோரும், ஊவா மாகாணத்தில் 73 சதவீதமானோரும் மற்றும் சப்ரகமுவ மாகாணத்தில் 73 சதவீதமானோரும் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பெறுபேறுகள் 

ஆங்கிலப் பாடத்தில் 73 சதவீதமானோரும், விஞ்ஞான பாடத்தில் 72 சதவீதமானோரும், கணித பாடத்தில் 69 சதவீதமானோரும் சித்தியடைந்துள்ளனர். 2 சதவீதமானோர் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை.

எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்க முடியும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Ranking Of Provinces Based On Ol Results 2025

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெறுபேறுகளில் பாரியளவில் முன்னேற்றம் இல்லை. இவ்வாண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

அதேவேளை, இந்த வருடத்துக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைகளை 2026 ஆம் ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இருந்து பரீட்சைகளை உரிய மாதங்களில் நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்."என தெரிவித்துள்ளார்.

யாழ். வட்டுக்கோட்டை மாணவி கொழும்பில் சாதனை

யாழ். வட்டுக்கோட்டை மாணவி கொழும்பில் சாதனை

  

முதலாம் இணைப்பு   

 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், வெளிவந்துள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய சித்தி பெற்ற மாணவர்களின் வீதங்களின் அடிப்படையில் மாகாணங்களின் நிலை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு | Ranking Of Provinces Based On Ol Results 2025

மாகாணங்களின் நிலை

1.தென் மாகாணம் 75.64 சதவீதம்.

2.மேல் மாகாணம் 74.47 சதவீதம்.

3.கிழக்கு மாகாணம் 74.26 சதவீதம்.

4.மத்திய மாகாணம் 73.91 சதவீதம்.

5.சப்ரகமுவ மாகாணம் 73.47 சதவீதம்.

6.ஊவா மாகாணம் 73.14 சதவீதம்.

7.வடமேல் மாகாணம் 71.47 சதவீதம்.

8.வடமத்திய மாகாணம் 70.24 சதவீதம்.

9.வட மாகாணம் 69.86 சதவீதம்.

ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

ராஜித சேனாரத்னவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு

மேலதிக தகவல்-ராகேஷ் 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US