சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ரோர் திருகோணமலை நடுக்கடலில் வைத்து கைது (Video)
மட்டக்களப்பு - நாலவலடியில் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற நபர்களை படகுகள் மூலம் அழைத்துச்சென்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி ஐ.பி.தென்னகோன் தலைமையில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 84பேர் கடற்படையினரால் திருகோணமலை நடுக்கடலில் வைத்து கைது செய்யப்பட்டு திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைபில் குறித்த படகை மறித்து
சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள்,
13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேர் உட்பட கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும்
நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள்
இதன்போது அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்றவர்களை ஏற்றிச் சென்று திரும்பும் வழியிலேயே குறித்த படகோட்டிகளும் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 4 படகுகள் மற்றும் இயங்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காத்தான்குடி பொலிஸ் நிலையம்
மட்டக்களப்பு நாவலடியில் இவர்கள் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



முடிவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சன் டிவியின் ஹிட் சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
