18 மாதங்களின் பின்னா் நீக்கப்பட்ட எல்லைக்கட்டுப்பாடுகள்: அவுஸ்திரேலியா்களின் உணா்ச்சிமிக்க தருணங்கள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட தனது சர்வதேச எல்லைக்கட்டுப்பாடுகளை அவுஸ்திரேலியா இன்று முதன்முறையாக தளா்த்தியுள்ளது.
இதனையடுத்து தடுப்பூசி போடப்பட்ட பொதுமக்கள் சுதந்திரமாக பயணிக்க மற்றும் பல குடும்பங்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
18 மாதங்களின் பின்னா் இன்று கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டநிலையில் விமான நிலையத்தில் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்புகள் இடம்பெற்றன.
சிங்கப்பூர் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து முதல் விமானங்களில் இருந்த பயணிகள் அதிகாலையில் சிட்னிக்கு வந்தடைந்தனர்,
பலர் பல மாதங்களாக தாங்கள் உறவுகளைக் கண்டபோது காணாத கண்ணீருடன் வாழ்த்துக்களை பாிமாறிக்கொண்டனா்.
இந்தநிலையில் வெளிநாட்டில் உள்ள சுமார் 47,000 பேர் தாயகம் திரும்ப ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன


கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam