இந்திய அணிக்கு எதிராக 400 ஓட்டங்களை குவித்துள்ள அவுஸ்திரேலியா
சுற்றுலா இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்துக்கான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரணடாம் நாள் ஆட்டம் இன்று (15.12.2024) இடம்பெற்றது.
நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், தமது முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றிருந்த நிலையில், முழு நாள் ஆட்டமும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில், இன்று ஆட்டம் நிறுத்தப்பட்ட போது, அவுஸ்திரேலிய அணி, 7 விக்கட்டுக்களை இழந்து 405 ஓட்டங்களை பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டம்
இந்த ஓட்ட எண்ணிக்கையில், ஸ்டீவன் ஸ்மித் 101 ஓட்டங்களையும், ட்ராவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
Travis Headache for India 🤒#INDvsAUS #TravisHead #AUSvIND #AUSvsIND #Jaspritbumrah𓃵 pic.twitter.com/B9IV5rn9ik
— POKHANTO (@Pokhanto_Fun) December 15, 2024
இந்திய அணியின் பந்துவீச்சில், பும்ரா 25 ஓவர்கள் பந்துவீசி, 7 ஓட்டமற்ற ஓவர்களுடன், 72 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இந்நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளையதினம் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |